“ழ’கரஞாயிறு” கடலூர் அ தேவநாதப் பாவாணர் அவர்கள் பெற்ற விருதுகள்.
45 ஆவது விருது.
- “ழ’கரஞாயிறு” கடலூர் அ.தேவநாதப் பாவாணர் அவர்களின் 45 ஆவது விருதாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரில் 'திருவள்ளுவர் இலக்கியப் பேரவை'யின் சார்பில் 2012 ஆம் ஆண்டில் "வாழும் நக்கீரர்" விருது திரு. எழிலரசு அவர்களால் வழங்கப்பட்டது.
46 ஆவது விருது.
- “ழ’கரஞாயிறு” கடலூர் அ தேவநாதப் பாவாணர் அவர்களின் தமிழ் ழகரப் பணியினைப் பாராட்டி 'சென்னை உரத்த சிந்தனை' என்ற அமைப்பின் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கிளையினர் "தமிழ் ழாழ் ழகரச் சான்றோன்" விருது வழங்கி சிறப்பிக்க உள்ளனர். இவ்விருதினை ஹைதராபாத்தில் வருகின்ற 21-7-2013 இல் நடைபெறவிருக்கின்ற உரத்த சிந்தனை ஆண்டு விழாவில் உரத்த சிந்தனை ஹைதராபாத் கிளையின் தலைவி திருமதி. துளசிபட், செயலர் திரு.ஞானப்பிரகாசம் ஆகியோர்கள் வழங்கி பாராட்ட உள்ளனர்.
“ழ’கரஞாயிறு” கடலூர் அ தேவநாதப் பாவாணர் அவர்கள் அணிந்திருக்கும் மோதிரத்தில் இவரது பெயரின் தலைப்பெழுத்துப்(Initial) பதிவுஇருக்காது. ஆனால் அதற்குப் பதிலாக வேழத்தின் (யானை) மீது 'ழ' எழுத்தை அம்பாரி வைத்து ஊர்வலம் வருவது போன்று அமைத்து அணிந்துள்ளார். இவரின் ழகரப் பற்றினை என்னவென்று சொல்வது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக