திங்கள், 18 ஜூலை, 2011

அந்தமான் தமிழ்ப் பள்ளிகளில் ழ கரப் பயிற்சி

அந்தமானில் தமிழ் மொழியை மாணவர்கள் பலர் தவறாக எழுதுகின்றனர் என்ற குற்றச்சாட்டு இன்று பரவலாக உள்ளது. மாணவர்களின் பேச்சுமொழி தமிழ் கலந்த இந்திமொழியாக இருக்கிறது. அதனால் இத்தகைய தவறுகள் வருகிறது. அந்தமான் தமிழ் மாணவர்களிடம் தமிழ் மொழி மீது பற்று இல்லை. தமிழ் மொழியை சரியாகப் பேச வேண்டும், சரியாக எழுத வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லை.

சனி, 15 ஜனவரி, 2011

'ழ' கர ஞாயிறு கடலூர் தேவனாதன் அவர்களின் நூல்
























































தமிழ் 'ழ' கரப்பணிகள்

தமிழ் 'ழ' கரப்பணிகளின் ஒரு பகுதியாக அது தொடர்பான செய்திகளை வெளியிடுதல்.

வெள்ளி, 14 ஜனவரி, 2011

தமிழீர் 'ழ'கரம் பேசுவீர்

தமிழனின் அடையாளம் தமிழ் மொழி. அந்தத் தமிழை தவறாக, பிழையாக பேசுவதால் தமிழை எழுதும் போது தவறாகவே எழுதுகின்ற நிலை வருகிறது. தவறாக எழுதும் போது எத்தனை அபத்தம் விழைகிறது பாருங்கள்.
வழி - பாதை
வளி - காற்று
முளை -
முலை -
மலை -
மழை -
பலம் - பழம் - பளம்
அலி - அழி - அளி
தமில், தமிள், டமில் இவ்வாறெல்லாம் தமிழைத் தவறாக ஒலித்தால் எழுதும் போதும் இப்படித்தான் எழுதத் தோன்றும். தமிழ் மொழியில் படித்தவர்கள், ஆசிரியர்கள், சிறந்த தமிழ் எழுத்தாளர்களிடங் கூட இத்தகைய பிழையான பேச்சுகளைக் கேட்கலாம். இது அவர்கள் தமிழ் தெரியாமல் நேரிடுகின்ற பிழைகளல்ல. பேசும்போது கவனிக்காமல் பேசுவதால் ஏற்படுகின்ற பிழைதான். இதனை சுலபமாக நீக்க முடியும்.
எப்படி?
'ல'கரம் பேசும்போது எவ்வாறு உச்சரிக்க வேண்டும்
'ள்'கரம் பேசும்போது எவ்வாறு உச்சரிக்க வேண்டும்
'ழ'கரம் பேசும்போது எவ்வாறு உச்சரிக்க வேண்டும்
ஆகியனவற்றை கவனித்து வேறுபாட்டினை உணர்ந்து பேசினால் சரியாக பேசிவிடலாம்.
முயற்சி செய்து பாருங்கள்
முடியாவிட்டால் மின்னஞ்சலில் எனக்கு எழுதுங்கள்

பொங்கல் திருநாள்


தமிழ் பேசும்/பேசாத தமிழர்க்கு தமிழர் திருநாளான பொங்கல் நல் வாழ்த்துகள்.

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் எடுக்கின்ற முடிவைப் போல் இனி வரும் நாட்களில் ஒவ்வொரு நாளும் தமிழ்'ழ'கரப் பணி பதிவினைச் செய்ய வேண்டும் என்று எனக்கு நானே கட்டளை இடுகிறேன்.
-அந்தமான் அருண்-

'ழ' கரம் பேசுவீர்

தமிழீர்! தமிழ் வாழ ழகரம் பேசுவீர்


"தமிழின் சிகரம் 'ழ'கரம்தான்!
அமிழ்த இனிப்பும் அதிலேதான்!
அதை நாம் சிதைப்பது கொடுமையன்றோ!
சிதைக்கா 'ழ்ழா'பயிற்சி செய் தமிழா"!