தமிழ் ஒலிப்புப் பயிற்சி .
இது ஒரு எளிய பயிற்சியாகும். மொழியுணர்வுடன் எந்தத் தமிழ் எழுத்தை எவ்விதம் கவனமாக உச்சரிக்க வேண்டும் என்பதை அறிந்து பயிற்சியினை மேற்கொண்டால் உங்களல் ஓரிரு நாளில் சரியாகப் பேச முடியும். ஒவ்வொரு எழுத்தையும் பேசும் போது சற்று கவனமாகப் பேசினாலே போதும். தமிழனின் அடையாளம் எது? உடையா? இல்லை. உடை மாறி விட்டது. உணவா? இல்லை. உணவு மாறி விட்டது. தமிழனின் அடையாளம் தமிழ் மொழி மட்டுந்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
"தமிழனே தமிழை சரியாகப் பேசவில்லையென்றால் வேறு எவன் சரியாகப் பேசுவான்".
"தமிழனே தமிழை சரியாகப் பேசவில்லையென்றால் வேறு எவன் சரியாகப் பேசுவான்".
வாய்.
வரைபட விளக்கம்.
1. ல. நுனி நாவை முன் மேற்பல்லின் உள் பக்கம்
மென்மையாகப் படுமாறு வைத்து 'ல' வை
ஒலிக்க 'ல'கரம் வரும்.
2,3. ந,ன. இந்த இரு வேறு ந,ன எழுத்துகளையும்
மேற்கண்ட முறையிலேயே ந,ன என்று
ஒலிக்க சரியான எழுத்தோசை வரும்.
4. ர நுனி நாவை முன் மேற்பல்லின் உள்பக்கம்
லகர ஒலிப்புக்கு இன்னும் ஒருபுள்ளி
உள்புரம் தள்ளிப் பட்டும் படாமலும்,
தொட்டும் தொடாமலும் நாவால்
அதிரும்படி மென்மையாகக் காற்றை
வெளியிட்டு 'ர' ஒலிக்க 'ர'கரம் வரும்.
5. ற நுனி நாவை இன்னும் சற்று உள் பக்கம்
தூக்கி நாவை அதிரும் படியாக 'ற்றா...' எனக்
காற்றை அழுத்தமாக வெளியிட
'ற'கரம் வரும்.
6,7. ள,ண 'ள' ,'ண' ஒலிக்கு நுனி நாவை மேலும் உள்
பக்கம் நன்கு வளைத்து நடு அண்ணத்தில்
அழுந்தப் பதியுமாறு வைத்து 'ள' என
ஒலிக்க 'ள'கரம் வரும்: 'ண' என ஒலிக்க
'ண'கரம் வரும்
8. ழநாவை இன்னும் நன்றாக உள்பக்கம்
வளைத்து மேல் அண்ணத்தில்
நாதொடாமல் 'ழ்ழா' என்று
மென்மையாக காற்றை விட்டால்
அடிநாவின் இரு மருங்கும் மேல்
கடைவாய்ப் பற்களைத் தொட்டு
காற்றை வெளியேற்றும் போது நுனி
நாவை இயல்பான நிலைக்குக்
கொணரின் 'ழ'கரம் வரும்.
