கடலூர் தேவநாதன் கைகூப்பி நீதி கேட்கிறார்.
"தமிழின் சிகரம் 'ழ'கரம்தான்!
அமிழ்த இனிப்பும் அதிலேதான்!
அதைநாம் சிதைப்பது கொடுமையன்றோ!
சிதைக்கா ;ழ்ழா' பயிற்சி செய் தமிழா!
துதிக்கையுடன் இருந்தால்தான் அது யானை! இன்றேல் பெரும் பன்றி!
தொட்டால் சுரீர் என்று சுட்டால்தான் அது நெருப்பு! இன்றேல் அது கரிக்கட்டை!
இறக்கை இருந்து பறந்தால்தான் அது பறவை!
அப்படியானால்
தமிழ் ழ கரச்சொற்கள் அனைத்தையும் 'ழ'கர ஒலிப்புடன் பேசுவோதான் தமிழர்கள்!சரிதானே?
ஆனால்
எதைத் தவறாகப் பேசக்கூடாதோ அதை மட்டும் தேடிக் கெடுத்துப் பேசுவது தமிழர்களுக்கு நீதியாகுமா?