உங்களுக்குத் தெரியுமா..?

 பூ தமிழ்மாதிகை 29/11/2005
  • பெரியார் 95:- தந்தை பெரியார் வாழ்ந்தது 95 ஆண்டுகள். அதில் அவர் பயணம் செய்த தொலைவு - 8,20,000 கல் (மைல்). பேசிய கூட்டங்கள் 10,700. பேசிய மொத்த நேரம் 21,400 ம்ணி. ஆகும்   - கோதை மணி.  ப.4
  • இயேசுவும் தமிழும்:- "ஜெருசலம் நகரின் ஒலிவமலையில் இயேசுவின் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவு உலகப் புகழ்பெற்ற பெருமைமிக்க சில மொழிகளில் மட்டுமே கல்வெட்டாக இடம் பெற்றுள்ளது. அதில் நமது தமிழ் மொழியும் ஒன்று. - மணிமேகலை. ப.4
  • நயகரா நீர் வீழ்ச்சி:- உலகப்புகழ் பெற்ற நயகரா நீர்வீழ்ச்சியினுள் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய மொழி நமது தமிழ் மட்டுமே. - குழலி ப.4
  • நேருவின் நல்லுரை:- பெருமை வாய்ந்த நமது மாநில மொழிகள் அறிவற்ற சிலர் கூறுவது போல் வெறும் திசை மொழிகளோ, நாட்டு மொழிகளோ அல்ல. செழிப்பான மரபு வழி தொன்மை மொழிகள் அவை. ஒவ்வொரு மொழியும் பல கோடி மக்களால் பேசப்படுகிறது. அம்மொழிகள் உயர் வகுப்பினர் எளிய மக்கள் அனைவருடைய கருத்துக்களுடனும் பண்பாட்டுடனும் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. எளிய மக்கள் தங்கள் தாய்மொழியின் மூலமே கல்வி, பண்பாட்டு முன்னேற்றம் அடைய முடியும் என்பதைக் கூறத்தேவையில்லை. எனவே நாம் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை கொடுத்துப் பெரும்பான்மையான நமது செயல்களை அம்மொழியிலேயே நடத்த வேண்டும். நமது கல்வித்திட்டமும் பொதுவேலைகளும் மாநில மொழிகளின் அடிப்படையிலேயே  அமைய வேண்டும்.  ( 1937 ஆம் ஆண்டு வெளியிட்ட 'மொழிச்சிக்கல்' என்ற நூலில் நேரு.) நன்றி - தமிழியக்கம்