விருதுகள்

“ழ’கரஞாயிறு” கடலூர் அ தேவநாதப் பாவாணர் அவர்கள் பெற்ற விருதுகள்.


45 ஆவது விருது.
  • “ழ’கரஞாயிறு” கடலூர் அ தேவநாதப் பாவாணர் அவர்களின் 45 ஆவது விருதாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நகரில் 'திருவள்ளுவர் இலக்கியப் பேரவை'யின் சார்பில் 2012 ஆம் ஆண்டில் "வாழும் நக்கீரர்" விருது திரு எழிலரசு அவர்களால் வழங்கப்பட்டது.
46 ஆவது விருது.
  • “ழ’கரஞாயிறு” கடலூர் அ தேவநாதப் பாவாணர் அவர்களின் தமிழ் ழகரப் பணியினைப் பாராட்டி 'சென்னை உரத்த சிந்தனை' என்ற அமைப்பின் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கிளையினர் "தமிழ் ழாழ் ழகரச் சான்றோன்" விருது வழங்கி சிறப்பிக்க உள்ளனர். வருகின்ற 21-7-2013 இல் ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கின்ற உரத்த சிந்தனை ஆண்டு விழாவில் சென்னை உரத்த சிந்தனை ஹைதராபாத் கிளையின் தலைவி திருமதி. துளசிபட், செயலர் திரு.ஞானப்பிரகாசம் ஆகியோர்கள் வழங்கி பாராட்டுகின்றனர். அந்த அன்பு நெஞ்சங்களை 'அந்தமான் தமிழ் ழகரப்பணி  மன்றம் & நூலகம்' சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
“ழ’கரஞாயிறு” கடலூர் அ தேவநாதப் பாவாணர் அவர்கள் அணிந்திருக்கும் மோதிரத்தில் இவது பெயரின் தலைப்பெழுத்துப்(Initial) பதிவுஇருக்காது. ஆனால் வேழத்தின் (யானை) மீது 'ழ' எழுத்தை அம்பாரி வைத்து ஊர்வலம் வருவது போன்று அணிந்துள்ளார்.  இவரின்ழகரப் பற்றினை என்னவென்று சொல்வது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக