புதன், 26 ஜூன், 2013

விருதுகள்

“ழ’கரஞாயிறு” கடலூர் அ தேவநாதப் பாவாணர் அவர்கள் பெற்ற விருதுகள்.


45 ஆவது விருது.
  • “ழ’கரஞாயிறு” கடலூர் அ.தேவநாதப் பாவாணர் அவர்களின் 45 ஆவது விருதாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரில் 'திருவள்ளுவர் இலக்கியப் பேரவை'யின் சார்பில் 2012 ஆம் ஆண்டில் "வாழும் நக்கீரர்" விருது திரு. எழிலரசு அவர்களால் வழங்கப்பட்டது.
46 ஆவது விருது.
  • “ழ’கரஞாயிறு” கடலூர் அ தேவநாதப் பாவாணர் அவர்களின் தமிழ் கரப் பணியினைப் பாராட்டி 'சென்னை உரத்த சிந்தனை' என்ற அமைப்பின் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கிளையினர் "தமிழ் ழாழ்      ழகரச் சான்றோன்" விருது வழங்கி சிறப்பிக்க உள்ளனர். இவ்விருதினை  ஹைதராபாத்தில் வருகின்ற 21-7-2013 இல்  நடைபெறவிருக்கின்ற உரத்த சிந்தனை ஆண்டு விழாவில் உரத்த சிந்தனை ஹைதராபாத் கிளையின் தலைவி திருமதி. துளசிபட், செயலர் திரு.ஞானப்பிரகாசம் ஆகியோர்கள் வழங்கி பாராட்ட உள்ளனர்.  
“ழ’கரஞாயிறு” கடலூர் அ தேவநாதப் பாவாணர் அவர்கள் அணிந்திருக்கும் மோதிரத்தில் இவரது பெயரின் தலைப்பெழுத்துப்(Initial) பதிவுஇருக்காது. ஆனால் அதற்குப் பதிலாக  வேழத்தின் (யானை) மீது 'ழ' எழுத்தை அம்பாரி வைத்து ஊர்வலம் வருவது போன்று அமைத்து அணிந்துள்ளார்.  இவரின் ழகரப் பற்றினை என்னவென்று சொல்வது. 



ஞாயிறு, 23 ஜூன், 2013

அந்தமான் தமிழ் ழகரப்பணி மன்றம் (கிளை) & நூலகம்


·         அந்தமான் நிக்கோபார்த் தீவுகள், பாத்துபஸ்தியில் 2005 ஆண்டு முதல் தமிழ் ழகரப்பணி மன்றம் என்ற பெயரில் தமிழ் மீது கொண்ட பற்றால் கவிஞர்.அந்தமான் அருண் ஆகிய நான் தமிழ் 'ழ'கரப்பணி மன்றம் என்ற ஒரு பயிற்சி அமைப்பினை நடத்தி வருகிறேன். அதனுடன் ஏறத்தாழ 1500 தமிழ் நூல்கள் கொண்ட நூலகம் ஒன்றினையும் நடத்தி வருகிறேன்.

·         தமிழ் மொழியின் சிறப்பு எழுத்தான ‘ழ’ எழுத்தை பிழையின்றி எப்படி உச்சரிப்பது என்று பள்ளியில் படிக்கிற மாணவர்க்கும் பொது மக்களுக்கும் கட்டணமின்றி ஒவ்வொருநாளும் வகுப்புகள் எனது வீட்டிலேயே நடத்தி வருகிறேன்.

·         தமிழ் ழகரப்பணி மன்றம் என்ற இந்த அமைப்பு ஒரு கிளை அமைப்பு. இதன் தாய் மன்றம் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில்  13/5 குலாம் முகமது முகைதீன் தெரு என்ற முகவரியில் “ழ’கரஞாயிறு” கடலூர் அ தேவநாதப் பாவாணர் அவர்கள் தலைமையில், 1995 முதல் செயல்பட்டு வருகிறது. இவரது முயற்சியினால் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவியர்களும், நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்களும், புலவர்களும், ஆசிரியர்களும், பேராசிரியர்களும், பொது மக்களும் கூட திருந்தியிருப்பது ஒரு சாதனை எனலாம். ழகரப்பணி பற்றி இவரது உழைப்பைப் புகழ்ந்து ஃபிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும்   ‘LETTRE DU CERCLE CULTURAL DES PONDICHERIENS’ (புதுச்சேரியர் கலைமன்ற மடல்”) No.76 June 2012 ல் சிறப்பாக பிரெஞ்ச் மொழியில் எழுதப்பட்டிருக்கிறது.

·         மொழிக்கான இவரின் நடவடிக்கைகளைப் பார்ப்போம்.
தமிழர்களில் பெரும்பாலானோர் சுமார் 95% வரை எழுதுகையில் ழகரத்தைத் தவறின்றி எழுதினாலும், பேசும் போது மட்டும் லகர,ளகர ஒலிகளுடன் பேசுவதுதான் ஏன் என்றுப் புரியவில்லை. அதற்குக்காரணம் எழுத்தொலிகளுக்கு இலக்கணம் சொன்ன நன்னூலாரும், தொல்காப்பியரும் எனலாம். ஏனெனில் அவர்கள் ழகரம் வருவதற்கு நுனிநாவை அண்ணத்தில் வருடவேண்டும் என்று அறுதியிட்டு எழுதியுள்ளார்கள். பேசும்போது அவ்வாறு வருடுதல் இயலாது. அப்படி வருடினால் ழகர ஒலிப்பு வராது. நா வருடும் இடத்துக்கேற்ப லகரமாகவோ ளகரமாகவோ மாறிவிடும். இது ழகரச்சொற்களுக்கு இழுக்கு உண்டாக்குவதாகும். தமிழ் செம்மொழி என்றால் செம்மையாகப் பேச வேண்டுமல்லவா! நம் தாய்மொழியின் பெயர் தமிழ். அதையே தமில்,தமிள் என்று தவறுதலாக தமிழர்களாலேயே பேசப்பட்டால் அது எப்படி செம்மொழி ஆகும்? என்கிறார் “ழ’கரஞாயிறு” கடலூர் அ தேவநாதப் பாவாணர். நியாயந்தானே!
இதனால் வெகுண்டெழுந்தவர் இந்த அவலநிலைமாற, தமிழ் ல,ள,ழ, எழுத்துகளோடு ர,ற, ந,ன,ண ஆகியனவற்றையும் எவ்வாறு ஒலித்துப் பேசுவது என்பதற்கு படத்துடன் விளக்கவுரை வழங்கித் தமிழ்நாட்டுத் தமிழ்ப் பாடநூலில் சேர்க்கக் கேட்டு தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை அனுப்பினார். இதனைப் பரிசீலித்த அரசு எட்டு (8) எழுத்துகளுக்கும் எட்டு முகங்களின் படங்களை வரைந்து அதன் கீழ் எழுத்துகளைப் பதிவு செய்து தமிழ்ப் பாடநூல் வெளியிடப்பட்டது. அம்முகங்களில் பதியப்பட்ட நாக்குகளின் அமைப்பு சரியில்லாததால் இவரே எட்டு எழுத்துகளையும் நாவின் ஐந்து நிலைகளில் வாயின் படத்தில் அமைத்து வரைபடம் வரைந்து மீண்டும் அரசுக்கு அனுப்பியது அப்படியே ஏற்கப்பட்டாலும் அதற்கு அவர் கொடுத்திருந்த எழுத்து விளக்கங்களை வெளியிடவில்லை. வெறும் படம் மட்டும் வெளியிடப்பட்டதைச் சுட்டிக்காட்டி விளக்கத்தின் தேவையைச் சுட்டிக்காட்டினார்.அதன் பின் அதற்கான விளக்கத்தை அரசு ஏற்று 2011லும் 2012 லும், மிகவும் விரிவாக நன்னூல் சூத்திரங்களுடன் 2013 லும் வெளியிட்டுள்ளது பாராட்டுக்குறியது.
அடுத்து இவர் ஆற்றிய தமிழ்நாட்டுக்கானத் தொண்டு யாதெனில், அரசு TAMIL NADU டமில்நடு என்று பெயரை ஆங்கிலப்பாணியில் சூட்டி, அதையே தமிழ் நாடு என்று படித்துக் கொள்ளுங்கள் என்றதைச் சகித்துக் கொள்ள முடியாத இவர், அப்பெயர் நம் தமிழ்மொழி ஓசைக்கேற்ப தமிழ் நாடு THAMIZH NAADU என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 1950 – ன், அட்டவணை –I ல் திருத்தம் செய்ய வேண்டும் என்று 2002 லும், 2006 லும் இரு மாநாடுகளைக் கூட்டி தீர்மானத்தை தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கையாக அனுப்பினார். அதன் மீது அரசு 2009 ல் நடவடிக்கைத் தொடங்கியது. ஆனால் அதன் முடிவுதான் என்னாயிற்று என்று தெரியவில்லை. இவ்வாறு தமிழ் மொழிக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் இழுக்குண்டாக்கும் முறைகளைக் களைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குறியது.

·         2004 ஆம் ஆண்டு உலக எழுத்தாளர் சங்கத் தலைவர் வாசவன் ஐயா அவர்கள் தலைமையிம் 70 எழுத்தாளர்கள் அந்தமான் தீவுக்கு சுற்றுலா வந்தனர். அவர்களுடன் “‘ழ’கரஞாயிறு” கடலூர் அ தேவநாதப் பாவாணர் அவர்களும் வந்திருந்தார். அப்போது தமிழ் ழகரப்பணி மன்றம் குறித்தும் பல தமிழர்கள் ழகரத்தைப் பிழையாக பேசி வருவதைப் பற்றியும் அவரின் ழகரப் பணிகள் குறித்தும் பேசினார். அந்தமான் தீவுகளிலும் இது போன்று பிழைபட பேசுவது நான் அறிந்திருந்ததால் தமிழ் ழகரப்பணி மன்றத்தின் கிளையினை நிறுவி சாதாரண மக்கள் முதல் பலருக்கும் பயிற்சி அளித்து வருகிறேன்.

·         2006 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் நாள் சென்னையில் நடந்த தமிழ் ழகப்பணிமன்றத்தின் ஆண்டுவிழாவில் அந்தமான் ழகரப்பணி மன்றக்கிளை மற்றும் நூலகத்தின் நிறுவனரும் செயலாளருமான கவிஞர்.அந்தமான் அருண் அவர்களுக்கு “ழகர………” என்ற விருதை சென்னை தலைமைத் தமிழ் ழகரப்பணி மன்றத்தின் புரவலர் “இளம்பாரி” உ.கருணாகரன் அவர்களால், தலைவர் ‘ழ’கரஞாயிறு” கடலூர் அ தேவநாதப் பாவாணர் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

·         “‘ழ’கரஞாயிறு” கடலூர் அ தேவநாதப் பாவாணர் அவர்கள் போர்ட்பிளேயர் வானொலியியில் ழகரம் பேசுவது எப்படி என்பது குறித்து 15 நிமிடங்கள் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

·         அன்று வந்த உலக எழுத்தாளர்கள் சங்க நண்பர்கள் கொடுத்த நூல்களுடன் என்னிடம் இருந்த நூல்களையும் சேர்த்து சுமார் இருநூறு நூல்களுடன் பாத்துபஸ்தியில் உள்ள எனது மளிகைக்கடையின் ஒரு பகுதியில் நூலகமும் தொடங்கினேன். அதன் பிறகு “‘ழ’கரஞாயிறு” கடலூர் அ தேவநாதப் பாவாணர் அவர்கள் சென்னையில் உள்ள பல நண்பர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான நூல்களைப் பெற்று என்னிடம் அளித்ததால் இன்று 1800 நூல்களுக்கு மேல் தமிழ் ழகரப்பணி மன்ற நூலத்தில் உள்ளது. இப்போது பாத்துபஸ்தி, நௌசாத் காலனியில் தமிழ் ழகரப்பணி மன்றம் மற்றும் நூலகம் நடந்து கொண்டு இருக்கிறது

·         அந்தமானில் தமிழ் மொழியை மாணவர்கள் பலர் தவறாக எழுதுகின்றனர் என்ற குற்றச்சாட்டு இன்று பரவலாக உள்ளது. மாணவர்களின் பேச்சுமொழி தமிழ் கலந்த இந்திமொழியாக இருக்கிறது. தமிழகத்தில் ஆங்கிலம் கலந்த தமிழ் மொழியில் பேசுவதைப் போலவே இத்தகைய தவறுகள் நடக்கின்றன. எனவே மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த துண்டுப்பிரசுரங்கள் மூலம் தமிழை உச்சரிக்கும் முறை பற்றி அறிவுறுத்தப்படுகிறது.

·         தமில், தமிள், டமில் இவ்வாறெல்லாம் தமிழைத் தவறாக ஒலிப்பதனால் செந்தமிழான தமிழ்மொழியின் இனிமை கெடும். ஆசிரியர்கள், பேச்சாளர்கள் போன்றவர்களிடமும் இத்தகைய பிழையான பேச்சுகளைக் கேட்கும்போது வேதனையாக இருக்கிறது. பேசும்போது கவனியாமல் பேசுவதால் இத்தகையப் பிழைகள் ஏற்படுகின்றன. இப்பிழைகளின்றி சரியாகப் பேச எளிய பயிற்சியினைத் தருகிறது தமிழ் ழகரப்பணி மன்றம்.


ஒலிப்புப் பயிற்சி .
·         இது ஒரு எளிய பயிற்சியாகும். மொழியுணர்வுடன் எந்தத் தமிழ் எழுத்தை எவ்விதம் கவனமாக உச்சரிக்க வேண்டும் என்பதை அறிந்து பயிற்சியினை மேற்கொண்டால் உங்களல்  ஓரிரு நாளில் சரியாகப் பேச முடியும்.
வாய்.

வரைபட விளக்கம்.
1.2,3.  ல, ந, ன:  நுனி நாவை முன் மேற்பல்லின் உள் பக்கம் மென்மையாகப் படுமாறு  வைத்து 'ல' ‘ந’ ‘ன’ஆகியவற்றை ஒலிக்க 'இம்மூன்று எழுத்தொலிகளும் வரும்.

4.  ர: நுனி நாவை முன் மேற்பல்லின் உள்பக்கம் லகர ஒலிப்புக்கு  இன்னும் ஒருபுள்ளி  உள்புரம் தள்ளி,  
       பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் நாவால் அதிரும்படி மென்மையாகக்  காற்றை வெளியிட்டு 'ர' ஒலிக்க 'ர'காரம் வரும்.

5.
  நுனி நாவை இன்னும் சற்று உள் பக்கம்  தூக்கி நாவை அதிரும்  படியாக 'ற்றா...' எனக் காற்றை அழுத்தமாக வெளியிட, றகாரம் வரும்.

6,7. ள,ண 'ள','ண'ஒலிக்கு நுனி நாவை மேலும் உள்பக்கம் நன்கு வளைத்து நடு அண்ணத்தில் அழுந்தப் பதியுமாறு வைத்து 'ள' என ஒலிக்க 'ள'காரம் வரும்: 'ண' என ஒலிக்க 'ண'காரம் வரும்
8.   நாவை இன்னும் நன்றாக உள்பக்கம் வளைத்து மேல் அண்ணத்தில் நுனிநா தொடாமல் 'ழ்ழா'  என்று காற்றை மென்மையாக  விட்டால் அடிநாவின் இரு மருங்கும் மேல் கடைவாய்ப் பற்களைத் தொட்டு, காற்றை வெளியேற்றும் போது நுனி நாவை இயல்பான நிலைக்குக் கீழேகொணரின் 'ழ'காரம் வரும்.
தொல்காப்பியத்தில் “நுனிநா அணரி அண்ணம் வருடின், ழகாரம் பிறக்கும்” என்று உள்ளது. பேசும்போது ழகர ஒலி வருவதற்கு, நுனி நாவை மேலே வருடும்படிச் செய்தால் உறுதியாக 100% ழகர ஒலி வராது. இப்போது நாம் தவறாகப் பேசி வருவதற்கு இதுதான் காரணமாகும்.

·         தமிழ் ழரப்பணி மன்றத்திற்கு அந்தமான் நிக்கோபார்த் தீவுகளில் மட்டுமல்லாமல் தமிழ் நாட்டிலும் பல கிளைகள் உள்ளன. அவைகள் வருமாறு.
1.வத்தலகுண்டு: இக்கிளை மன்றத்தை தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு
பெற்ற “ழகர மாமணி” சொ.நா.எழிலரசு அவர்கள் மிகச்சிறப்பாக நடத்தி சாதனைபடைத்து வருகிறார்.
2.நிலக்கோட்டை: அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் இக்கிளை மன்றம்
 மாநிலத்தலைவர் அவர்களால் தொடங்கி வைக்க எழிலரசு
 அவர்கள் ஏற்பாட்டில் தலைமை ஆசிரியை அவர்கள்
நடத்தி வருகிறார்.
3.போடிநாயக்கனூர்: திரு,இரவி அவர்கள் செயலாளராகவும் திருமதி கோமதி
அவர்கள் பயிறியாளராகவும் இருந்து இம்மன்றத்தை நடத்தி வருகிறார்கள்.
தமிழ் ழகரப்பணி மன்றம் மற்றும் கிளைகள் தொடர்புக் கைப்பேசி எண்கள்.
சென்னை “ழ’கரஞாயிறு” கடலூர் அ தேவநாதப் பாவாணர்                   - 93808 38733
வத்தலக்குண்டு  சொ.நா.இராசாமணி என்ற எழிலரசு                           - 90959 02217
நிலக்கோட்டை                                                                                ……………………
போடிநாயக்கனூர் திரு.இரவி                                                            - 94439 18936
அந்தமான் எம்.ஜே.எஃப்.த.அருணாசலம்என்ற கவிஞர்.அந்தமான் அருண்                        - 94342 85769, 9843465909
                       


புதன், 12 ஜூன், 2013

பிழையில்லாமல் 'ழ'கரம் பேசச் செய்ய வேண்டியவை.

தமிழ் மொழியின் சிறப்பு எழுத்தான 'ழ' கரத்தை உச்சரிப்பு மாறாமல் எப்படிப் பேசுவது?  வேகமாகப் பேசும்போது எப்படியும் பிழையில்லாமல் பேச முடியவில்லையே என்று நண்பர்கள் பலர் கேட்கிறார்கள்.
  'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் 'நா' ப்பழக்கம் என்பது பழமொழி. எனவே முதல் நாள் பேசும் பொழுது  'ழ' கரம் பேச வேண்டிய இடங்கள் வந்தவுடன் நிதானமாகவும் கவனமாகவும் பேச வேண்டும். இப்படியே அடுத்த  சில நாட்கள் கவனமாகப் பேசினாலே போதும். இனி இப்படித்தான் பேச வேண்டும் என்று நமக்குத் தெரிந்து விடும். பிறகு பிழையில்லாமல் பேசிவிடலாம்.அப்போது ஒவ்வொருவருக்கும் ஏற்படும் மகிழ்சிக்கு அளவே இராது.

     தமிழைத்  'தமி'ல்' என்றும்.' தமி'ள்'  என்றும் மாற்றிப் பேசலாமா?
                               
                                      சிந்திப்போம்!

    செம்மொழி யான தமிழ் மொழியை பிழையின்றி பேசுவோம்.!