பண்டைக் காலத்தில் தமிழில் உரைநடை இல்லையென்றே சொல்லலாம். அனைத்தும் செய்யுளிலேயே இருந்தது. இலக்கியங்கள், இலக்கண நூல்கள் யாவும் செய்யுளிலேயே இருந்தன. தொல்காப்பியம் செய்யுளை அடிப்படையாகக் கொண்டதுதான்.
நன்னூல் கூட செய்யுள்தான். ஆங்காங்கே உரைநடை பற்றிய ஓரிரு கருத்துகள் வருமே தவிர அவர்கள் செய்யுளுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள். மருத்துவ நூல்கள் முதல் அரசு அறிவிப்புகள் வரை அனைத்துமே செய்யுளாகவே இருந்தது. ஜோதிடமும் செய்யுள்தான். அகராதியே செய்யுளில்தான் இருந்தது. அதற்கு நிகண்டு என்று பெயர்.
இப்போது செய்யுளிருந்து உரைநடைக்கு மாறியிருக்கின்ற எழுத்து முறைகளைக் காணலாம். செய்யுள் எவ்வாறு அமையவேண்டும், அதன் வகைகள், விதிகள் என்று இலக்கணம் வகுத்து தமிழ் மொழியை செம்மொழியாக்கினார்கள். இன்று உரைநடை உலகத்தில் இருக்கிறொம். உரைநடைக்கென்று ஒரு தெளிவான நடைமுறை இன்று இல்லை. ஆகவே பள்ளியில் படிக்கின்ற போதே மாணவர்க்கு உரையாடல் எவ்வாறு இருத்தல் வேண்டும்; எப்படி பத்தி அமைத்து எழுதுதல் வேண்டும்; மொழிபெயர்ப்பு அமைதல் எவ்விதம் போன்ற செய்திகளை உணர்த்திட வேண்டும். சொந்தமாக சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஆற்றல் மிகக்குறைவாகவே மாணவர்களிடத்தில் காணப்படுகிறது. தெளிவான வாக்கிய அமைப்புகளுடன் சரியான சொற்களையிட்டு பேசுகின்ற எழுதுகின்ற ஆற்றலை வளர்க்க வேண்டும்.
மிகவுண்மையான கருத்து. உரைநடைத்தமிழைப்பற்றி தேடுகையில் இங்கு வந்தேன்.நல்ல கருத்து. அக்காலத்தில் தமிழ் பெரும்பாலும் செய்யுள்நடையிலேயே இருந்துள்ளது. தமிழிலே சொல்லிலக்கணமிருந்தது, யாப்பிலக்கணமிருந்தது, அணியிலக்கணமிருந்தது ஆனால் உரைநடையிலக்கணமென்றெதுவுமில்லை. நாம் இக்காலத்தில் எழுதுவதெல்லாமே உரைநடைதான் (கவிதைகளின்னிலையைப்பற்றி பின்னர்பார்போம்). (’தமிழ் இலக்கணம்’ என்றெழுதுதல் தவறு, ’தமிழிலக்கணம்’ என்பது சரி).
பதிலளிநீக்குஎழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், புணர்ச்சியிலக்கணம் முதலியவை உரைநடைக்கும்பொருந்தும். உரைநடையென்பது பேசுவதைப்போன்றேயெழுதுவதேயாகும்.
ஆங்கிலத்தாக்கமிருக்குமிக்காலத்தில் நாம் அறியவேண்டியதென்னவென்றால், ஆங்கிலம்போன்றபிறமொழிகளுக்கில்லாதவொரு இலக்கணம் தமிழுக்குண்டு, அதுவே புணர்ச்சி. ஆங்கிலத்தில் ‘school kid' என்பதை தமிழிலும் ‘பள்ளிக் குழந்தைகள்’ என பிரித்தெழுதுதலாகாது. ‘பள்ளிக்குழந்தைகள்’ என சொற்களை சேர்த்தேயெழுதவேண்டும்.'Even then' என்பதை ‘செய்தாற்கூட’, ’while walking' என்பதை ‘நடக்கும்போது’ ’He is having food' என்பதை ‘சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்’ இவ்வாறு, சொற்கள் சேர்ந்தேவரும், ‘க்’ போன்ற வல்லினம் மிகுந்தாலுஞ்சரி மிகாவிட்டாலுஞ்சரி.
புணர்ச்சிவிதிகள், எவ்வாறு புணர்ச்சியை பயன்படுத்தவேண்டுமெனசொன்னாலும், சொற்கள் எப்போதுபுணரவேண்டும் எப்போதுபுணரதேவையில்லை என்பதை சொல்லவில்லை.
செய்யுகளிலக்கணம் ‘சீர்’பற்றி கூறுகின்றதால் செய்யுள்களை சீர்பிரித்தெழுதினார்கள். (’அகர முதல’ இதில் ‘அகர’ என்பது சீர், சொல்லல அல்லவா?). பிற்காலத்தில் உரைநடை பரவலானபோது, சொற்களை எப்போதுபுணர்த்தவேண்டும் எப்போதுபுணர்த்தக்கூடாதென்பதை சரிவர உணராததால் (அதற்கு இலக்கணமுமில்லை), ஒரு வாக்கியத்தையே முழுவதுமாகச்சேர்த்து ஒரேசொற்போலெழுதினார்கள். (ஒருவாக்கியத்தையேமுழுவதுமாகச்சேர்த்துஒரேசொற்போலெழுதினார்கள் - இதுபோல்). இதுபடிப்பவற்களுக்கு எளிதிற்புரியாதென்பதால் பிற்காலத்தில் பிரித்தெழுதினார்கள். ஆனால், அது இக்காலத்தில் அளவுகடந்து சொற்களை நாறுநாறாக மிகவும்பிரித்தெழுதுகிறோம்.
’பாடினவன் பாட்டைக்கெடுத்தான், எழுதினவன் ஏட்டைக்கெடுத்தான்’ என்பதைபோல படித்தவர்கள் மிகுந்திருக்குமிக்காலத்தில் தமிழின்னிலை மிகக்கவலைக்கிடமாகயிருப்பது மிகவும் வருந்ததக்கதே.
ஆக, உரைநடைத்தமிழ் அக்காலத்திலுஞ்சரி இக்காலத்திலுஞ்சரி சரியாயெழுதப்படாதவொன்றே. ஐநூறு அல்லது ஆயிரமாண்டுகளுக்குப்பின் பின்னோக்கிப்பார்ர்கும்போது உரைநடைத்தமிழுக்கு மிகவும் கேடுவிளைவித்த பழி நம்மைச்சேரும்.
உரைநடைத்தமிழென்பது எளிதானவொன்றே ‘பேசுவதுபோல் எழுதவேண்டும்’ அவ்வளவே. அதவாது, நாம் பேசும்போது எச்சொற்களை சேர்த்துபேசுகிறோம், எங்கு சொற்களுக்கு பொருட்சிறப்புவருமாறு அழுத்திப்பேசுகிறோம், எங்கு நிறுத்திப்பேசுகிறோம் என்றவாறே சொற்களை சேர்த்தும் பிரித்தும் எழுதுதல்வேண்டும். புணர்ச்சிவிதுகள், சொற்றொடர்வகைளை அறிதல்வேண்டும்.
- நன்றி
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.. இணைய இணைப்புச் சிக்கல் காரணமாக உங்கள் கருத்தை உடனே கவனிக்க இயலவில்லை.
பதிலளிநீக்கு